
கடந்த 1994ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் என்ற இஸ்ரோ விஞ்ஞானி விண்வெளி திட்ட ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, கேரள போலீஸார் நம்பி நாராயணனை கைது செய்து விசாரித்தனர். இதில் அப்போது கேரளாவின் முதல்வராக இருந்த கருணாகரனுக்கும் சம்மந்தம் இருக்கும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி, கருணாகரனை பதவிவிலக செய்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் எந்தவித உளவு சதியும் இல்லை, தவறாக வழக்குத் தொடர்ந்த போலீஸார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது. நம்பி நாராயணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் 10 லட்சம் நஷ்ட ஈடு வேண்டும் என்றார்.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றம் 2015ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் உச்சநீதி மன்றம், இந்த வழக்கில் நம்பி நாராயணனை தவறு செய்த அதிகாரிகள் யார்? இதன் பின்புலம் என்ன? என்பதையெல்லாம் விசாரணை மேற்கொண்டு உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கியுள்ளார். நம்பி நாராயணனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக கேரள அரசு அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.