Published on 30/06/2020 | Edited on 30/06/2020
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வட மாநிலங்களைவிட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. இன்று மட்டும் கேரளாவில் 131 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,442 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 2,112 மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இன்று 75 பேர் நோய் தொற்றில் இருந்து குணமானதை அடுத்து இதுவரை மொத்தமாக 2,304 பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகி உள்ளார்கள்.