Skip to main content

கேரளா குண்டு வெடிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு 

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

nn

 

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். விசாரணையில் டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி  வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு வைப்பதற்காக இணையதளத்தில் ஆறு மாதங்களாக தேடித்தேடி தகவல்களை திரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது. 16 ஆண்டு உறுப்பினராக இருந்ததாகவும் சபை செயல்பாடு பிடிக்காததால் குண்டு வைத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் டொமினிக் மார்ட்டின்.

 

இந்நிலையில் இந்த வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. முதலில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், 90 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த தொடுபுழாவை சேர்ந்த குமாரி (53) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்