Published on 07/05/2019 | Edited on 07/05/2019
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் அநடைபெற்று வரும் நிலையில், மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தினத்தில் ரூ.900 கோடி ரூபாய் அளவு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
குமாரசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, விவசாய கடன்கள் பல கட்டங்களாக தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 15.5 லட்சம் விவசாயிகளின் 7417 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடைபெறுவதால் விவசாய கடன் தள்ளுபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே சுமார் 1.5 லட்சம் விவசாயிகள் வாங்கிய ரூ.900 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.