Skip to main content

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் யார்? பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் ட்விட்டால் குழப்பம்!

Published on 04/08/2019 | Edited on 05/08/2019

காஷ்மீர் மாநிலத்தில் கேரன் எல்லை பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் அங்கமான (BAT-BORDER ACTION TEAM) என்ற பிரிவை சேர்ந்த ஏழு பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள் என தெரிவித்துள்ளார்.

 

KASHMIR ISSUE INDIA ARMY PAKISTAN PM IMRANKHAN TWEET

 

இந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்றும், காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்