Skip to main content

சிறுமியை கோவிலில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த காவி மிருகங்கள்!  - தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
aasiya bhanu

 

காஷ்மீரை உலுக்கிய சிறுமி கற்பழிப்பு கொலை சம்பவத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சையது இப்ராஹீம் விடுத்துள்ள அறிக்கை:


‘’ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரசானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முஹம்மத் யூசுஃப், நஸீமா தம்பதியர். இவர்களுக்கு  8 வயதில் ஆசிஃபா பானு என்ற மகள் உள்ளார். 

 

குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆசிஃபாவை காணவில்லை.
 இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

 இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவி காமுகர்களிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்க முயற்சித்துள்ளனர். 

இதனையடுத்து பெற்றோர்களின் போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதன்பின்னர் இந்த வழக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

 

 இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 8 காவி பயங்கரவாதிகளை  கைது செய்துள்ளனர். 

 

சிறுமியை கடத்திசென்று கோவிலில் அடைத்து வைத்து, மயக்க மருந்தை கொடுத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளார்கள் இந்த மனித மிருகங்கள். இதன் பின்னர் அந்த சிறுமியை முகத்தில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.


பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் காஷ்மீரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த ஈனச் செயலை கோவிலிலே அரங்கேற்றியதன் மூலம் காவிகள் , இந்துக்களின் கோவில்ளைக்கூட புனிதமாக கருதுவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

 

  சக மதத்தவர்களை மனிதர்களாக கூட கருதாத காவி பயங்கரவாதிகளையும், குற்றத்தை மறைக்க நினைத்த காவல்துறையையும், பாஜக கூட்டணியில் நீடிக்கும் மஹபூபா முஃப்தி அரசின் கையாலாகாத தனத்தையும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

 

இந்த கொடூரத்தை செய்த காவி மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.’’

சார்ந்த செய்திகள்