Skip to main content

"கஃபே காபி டே" சித்தார்த்தா பணமதிப்பிழப்பு காரணத்தால் வீழ்ந்தாரா?

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மருமகன் சித்தார்த்தாவின் உடல் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி மங்களூரு அருகே காரில் சென்றுள்ளார் சித்தார்த்தா. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் காரை விட்டு இறங்கிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் தற்போது நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   

 

siddharth



இவரது தொழில் வீழ்ச்சிக்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரிய சிக்கலை ஏற்படுத்தியதாக தெரிவிக்கின்றனர். அதே போல் 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட பின் இவருடைய தொழில் கடும் சரிவை சந்தித்துள்ளது. அந்த கால கட்டத்தில்தான் இவர் தன்னுடைய சொத்துக்களை அதிகம் விற்று கடனாளியாகியுள்ளார். அப்போதுதான் பங்குகளில் இவருக்கு நிறைய பிரச்சனை வந்துள்ளது. 2016 நவம்பர் வரை இலாபம் சம்பாரித்த காபி டே நிறுவனம் போக போக இழப்பை சந்தித்துள்ளது. அதன்பின் கொஞ்சம் நிலைமை சரியான பின், மீண்டும் காபி டே கொஞ்சம் மேலே வர தொடங்கி உள்ளது. 


ஆனால் அதன் பின்னும் சித்தார்த்தா வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டு நடத்தியுள்ளனர். இவரது மாமனார் எஸ்.எம். கிருஷ்ணா பாஜகவில் இணைந்த பின்னும் வருமானவரித் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் இவரது சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்பு அதிக மனஅழுத்தத்தில் இருந்த சித்தார்த்தா, நான் ஒரு தொழிலதிபராக தோல்வி அடைந்துவிட்டேன் என்று கூறி தற்கொலை செய்துள்ளதாக சொல்கின்றனர்.

சார்ந்த செய்திகள்