Skip to main content

ஜார்க்கண்டில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி?

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. 
 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும். கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (23.12.2019) சரியாக காலை 08.00 மணிக்கு தொடங்கியது. 

JHARKHAND ASSEMBLY VOTE COUNTING CONGRESS ALLIANCE LEADING


தற்போதைய நிலவரப்படி (11.15 AM) மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி 27 இடங்களிலும், ஜெவிஎம் 3 இடங்களிலும், மற்றவை 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 42 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்