Published on 12/12/2018 | Edited on 12/12/2018

ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியும்கூட தனது ஆட்சியின் சாதனைகளை பேசமுடியாத மோடி, சமீப மாதங்களாக படேல் பெருமைகளைப் பேசியும், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை கேலி செய்தும் பேசிவந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக வந்ததைத் தொடர்ந்து, நேரு மோடியை பார்த்து சிரிப்பதுபோல ஒரு படத்தை குஜராத்தின் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவியிருக்கிறது.