தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 94 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசு ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
இதனையடுத்து பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கேரளா, இடது ஐக்கிய முன்னணிக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் கரோனா தொடர்ந்து பரவி வருவதால், இது மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடக்கூடிய நேரமல்ல. இது கரோனாவிற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதற்கான நேரம்" என கூறியுள்ளார்.