Skip to main content

காவிரி நதிநீர் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தை நாடிய கர்நாடக அரசு

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Cauvery water issue The Karnataka government approached the Supreme Court

 

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து அன்றைய தினமே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தனர்.

 

அதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் நேற்று (19.09.2023) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கி இருந்தனர். இதையடுத்து காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், டெல்லியில் இன்று இந்த வழக்கு தொடர்பாக முத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகியுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கோண்டார். அதே சமயம் கர்நாடக அரசு சார்பாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு  டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் கூட்டி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக விவாதித்தனர்.

 

Cauvery water issue The Karnataka government approached the Supreme Court

 

இந்நிலையில் போது நீர் இல்லாததால் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி நீர் திறக்க இயலாது எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மசோதா விவகாரம்; ஆளுநர் தரப்புக்கு கடுமை காட்டிய உச்சநீதிமன்றம்!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

governor vs supreme court

 

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

 

ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது எனக் கூறப்பட்டபோது, “அது தொடர்பான கோப்புகள் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே செய்திருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.

 

ஆளுநர், ஒன்றிய அரசின் NOMINEE என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து இந்த பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். காலதாமதம் செய்தால் மசோதாக்கள் விசயத்தில் நாங்கள் உத்தரவிட நேரிடும்” எனக்  கடுமை காட்டியதுடன், வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ஆளுநர் தீர்வு காணாவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” - தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

If the governor does not find a solution, he will have to issue an order SCin the case pursued by the TNgovt

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இரண்டாவது முறையாக 10 மசோதாக்களை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கடந்த 28 ஆம் தேதி ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு மசோதா ஆளுநர் மூலமாகத் திரும்ப அனுப்பப்பட்டால், அந்த மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன் பின்னால்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும். இங்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்” என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில், “இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளுநரின் அதிகாரத்தின்படி மசோதாவை நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற அதிகாரம் உள்ளது. அந்த வகையிலேயே இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மசோதாக்கள் மீதான ஒப்புதல் வித் கெல்ட் (withheld) என முடிவு செய்யப்பட்ட பிறகு மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி இருக்கலாம். ஆனால் சட்டப்பேரவைக்கும் அனுப்பவில்லை.

 

If the governor does not find a solution, he will have to issue an order SCin the case pursued by the TNgovt

 

குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால் ஆளுநர் மத்திய அரசின் நாமினி (nominee) என்பதை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே அனுப்பி இருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் குழப்பம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு (11.12.2023) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்