Published on 28/06/2021 | Edited on 29/06/2021
கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் நான்கு லட்சத்தைக் கடந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது 50 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் பேசும்போது, "கரோனா தொற்றின் இரண்டாம் அலை இன்னும் குறையவில்லை, நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்துவருகிறது. எனவே எந்த ஒரு அஜாக்கிரதைகளுக்கும் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுகின்றன" என்றார்.