Published on 17/06/2019 | Edited on 17/06/2019
நேற்று இந்தியா, பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது.இந்த போட்டியில் ரோஹித் சர்மா 140 ரன்கள் குவித்தார்.பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி மழையால் தடை பட்டது. பின்னர் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் போது மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் பௌலிங் போடும் போது வழுக்கி விழுந்து காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார் புவனேஷ்வர் குமார்.
இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், அதில் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அடுத்த 2 அல்லது 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் விளையாட மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என கூறினார். ஏற்கனவே ஷிகர் தவான் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கம் நிலையில் புவனேஷ்வர் குமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.