உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
![INDIA CRICKET PLAYERS PERFORMANCE VERY WELL PM NARENDRA MODI TWEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/iZZS36YjiBmx1wUfQMUojaeZ4R4pMxzBdUMJd5t5v3s/1562772403/sites/default/files/inline-images/PM%20TWEET_0.png)
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் உலகக்கோப்பை தொடர் முழுவதும் பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது என தெரிவித்தார். ஏமாற்றமளிக்கும் முடிவு என்றாலும், இந்திய அணியின் போராட்டக்குணத்தை காண முடிந்தது என தெரிவித்தார். வெற்றி, தோல்வி வாழ்க்கையின் அங்கம் என்றும், அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.