India administers 32,36,63,297 doses of #COVID vaccines and overtakes the USA: Ministry of Health pic.twitter.com/3Bz20h6eUm
— ANI (@ANI) June 28, 2021
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 32.36 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை 34 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.