நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கு பெரும் பயமாக இருப்பது பெட்ரோல், டீசல் விலையின் ஏற்றம்தான். தினசரி அதன் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஏற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே ஜெய்பூரில் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், ”நான் ஒரு அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிப்பில்லை. என்னுடைய அமைச்சர் பதவியை இழந்தாலொளிய நான் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விலை உயர்வை குறைப்பது அரசாங்கத்தின் கடமை. மாநில வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம். மத்திய அரசாங்கம் விலை உயர்வை குறைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.