கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வரும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் மேற்குவங்க மாநிலத்தில் சுமார் 14,000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நேற்று அம்மாநில முதல்வர் தலைமையில் கொல்கத்தாவில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜூலை 31 வரை அம்மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், தற்போதைய ஊரடங்கில் பின்பற்றப்படும் விதிமுறைகளே மீண்டும் பின்பற்றப்படும் எனவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அங்கு பெருநகர் ரயில் சேவை மற்றும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை எனவும், உணவகங்கள், அத்தியாவசிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே திறப்பதற்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.