Published on 22/06/2019 | Edited on 22/06/2019
பீகாரின் முஸாபர்பூரின் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் குவியல் குவியலாக மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மூளை அழற்சி நோயால் 110 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிஹாரில் இறந்துள்ள நிலையில், அதில் அதிக அளவு குழந்தைகள் பலியாகியுள்ளது இந்த மருத்துவமனை தான். இவை அனைத்தும் பல ஆண்டுகளாக உடற்கூறு சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் எலும்புகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை சார்பில் இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை.
இது குறித்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பேசும்போது, உடற்கூறாய்வு பிரிவு கல்லூரியின் முதல்வர் தலைமையில் தான் செயல்படுகிறது. எனவே அவர்தான் விளக்கமளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.