இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் இந்து மகா சபையின் தலைவர் பூஜா பாண்டே, காந்தி உருவ பொம்மையை சுட்டு நாதுராம் கோட்ஸே வாழ்க என கோஷங்களும் எழுப்பப்பட்ட வீடியோவை வெளியிட்டார். அதில் சுடப்பட்ட காந்தி பொம்மைக்குள் இருந்து ரத்தம் போல சிகப்பு நிற திரவம் வழிந்து வந்ததையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையானது.
இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள இந்து மகா சபை தலைவரின் கணவர் அஷோக், 'நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்துகொண்டால் அவர்களை கொலை செய்ய எங்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். குழந்தைகள் நம்மைபோல அப்பாவிகளாக இருக்கமாட்டர்கள். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் அவர்கள் பல பேரை கொல்லுவார்கள். மேலும் தைரியமான பெண்மணியான பூஜா இந்து மதத்திற்கு சேவை செய்வதற்காகவே சாதாரண வாழ்விலிருந்து விலகி துறவறத்தை தேர்தெடுத்தார்' என கூறினார்.