Skip to main content

நிரவ் மோடியை பிடிக்க உதவுங்கள் !! வெளிநாடுகளுக்கு கோரிக்கை விடுக்கும் இந்தியா

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

 

NIRAV

 

 

 

வெளிநாட்டில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை பிடிக்க உதவுங்கள் என இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

 

பிரபல வைர நகை வியாபாரியான நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிட்டத்தட்ட 13000 கோடி ரூபாய்க்கு மேல்  கடன் வாங்கி மோசடி செய்து திரும்ப செலுத்தாமல் சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

 

இந்த மோசடி குறித்து சிபிஐ அமலாக்கதுறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. அதேபோல் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நிரவ் மற்றும் அவர் உறவினர் மெகுல் இருவரையும் இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் புலனாய்வுத் துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

 

 

 

இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள நிரவ் மோடியை பிடிக்க உத்தரவிடும்படி இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த 3 நாடுகளுக்கும், அங்குள்ள இந்திய அமைப்புகளுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

நிரவ் மோடி முதலில் அமெரிக்காவிலும், ஹாங்காங்கிலும் பதுங்கியிருப்பதாக முன்னர் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு தஞ்சம் அடைந்துள்ளதாக வந்த செய்திக்கு பின்னர் தற்போது பிரான்சுக்கும் அங்கிருந்து பெல்ஜியத்திற்கும் தப்பியதாக கூறப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்