Skip to main content

பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிட்டீர்களா? - தவறினால் நாளை முதல் அபராதம்!

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

pan card aadhar card link

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும். 

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான கால அவகாசத்தையும் பல்வேறு முறை நீட்டித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மார்ச் 31ம் தேதிவரை இந்தக் காலக்கெடுவானது நீட்டிக்கப்பட்டது. 

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்தக் காலக்கெடுவானது இன்றுடன் முடிவுக்கு வருவதால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும். நாளை முதல் ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது

 

அதன்படி, ஏப்ரல் 1 க்கு பிறகு அடுத்த மூன்று மாதங்களுக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு இணைப்பதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்..

 

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

 

1. http://incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.

 


    

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்த ஆண்டு 1900; வயதோ 41; ஆதார் அட்டையால் தவியாய் தவிக்கும் பெண்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Born Andy 1900; Age 41; Woman struggling with Aadhaar card

 

ஆதார் அட்டையில் பிறந்த வருடம் பிழையாக இருப்பதால் பல வருடங்களாக அதை மாற்ற முடியாமல் திருச்சியை சேர்ந்த பெண் தவித்து வருகிறார்.

 

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த கவிதா என்ற பெண் வைத்த கோரிக்கை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவியின் பெயர் கவிதா. 41 வயதான கவிதா 1982ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு ஆதார் அட்டை கொடுக்கும் பொழுது அதில் பிறந்த வருடம் 1900 என அச்சிடப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், இதை மாற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கவிதா அளித்த மனுவில், “எனது வாக்காளர் அடையாள அட்டையில் 3.5.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ரேஷன் கார்டில் 41 வயது என்று உள்ளது. ஆனால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் 1900 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டையின் படி எனக்கு 123 வயது. தற்போது ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்து ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிலும் எனது வயது மாறுகிறது. ஆதார் அட்டையில் வயதை மாற்றக் கோரி 4 ஆண்டுகளாக அலைந்து வருகிறேன். ஆனால் மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எந்த ஒரு நலத் திட்டமோ, வங்கியில் கடனுதவியோ எதுவும் வாங்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே, எனது வயதை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

மேலும், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற முடியாததால் பல சிக்கல்களை கவிதா அனுபவித்து வருவதாகவும் பிழையைத் திருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Next Story

ஆதார் இருக்க ஐடி திட்டம் தேவையா?- தேமுதிக விஜயகாந்த் கேள்வி

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

Do you need an ID scheme to have Aadhaar?- Question by Dmdk Vijayakanth

 

'அரசின் அனைத்து சலுகைகளையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் எண் இருக்கும் பொழுது 'மக்கள் ஐடி திட்டம்' தேவையா?' என தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒவ்வொரு மாநிலமும் தனி அடையாள எண் வழங்க முன் வந்தால் நாட்டில் குழப்பம் ஏற்படாதா? மத்திய மாநில அரசுகளின் சலுகைகளை பெற ஆதார் எண் இருக்கும்பொழுது மக்கள் ஐடி திட்டம் எதற்காக. தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்த பிறகு மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்துங்கள்' என தெரிவித்துள்ளார்.