ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ஹரியானாவில் மொத்தமாக 90 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இரண்டு கோடியே மூன்று லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர்பூபிந்தர் சிங் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தமாக 90 தொகுதிகளில் 1,027 வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயன்று வருகிறது. அதேநேரம் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் கடும் போட்டி ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளுடன் இன்று நடைபெற இருக்கும் ஹரியானா தேர்தல் முடிவுகளும் வரும் எட்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று வாக்குப் பதிவுகள் முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.