ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்று உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரிக்கு அருகில் உள்ள ஓடுலாபுரி என்ற பகுதிக்கு மாணவிகள் 20 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அருகில் உள்ள நதிக்கரைக்கு மேலே உள்ள பாலத்தில் இருந்து ரயில் வரும்போது செல்பி எடுக்க அவர்கள் விரும்பியுள்ளார்கள்.
இதற்காக அவர்கள் இருவரும் அந்த பாலத்தில் ஏறி ரயில் வருவதற்காக காத்து இருந்தார்கள். சிறிது நேரத்தில் ரயில் வரவே, அவர்கள் இருவரும் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்றுள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி இருவரும் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.