கடந்த 2015ஆம் ஆண்டு புனிதமான கங்கை நதிக்கரையில் மிகப்பெரிய குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்திருக்கிறது, இவை கங்கை நதியில் கலக்கக்கூடாது என்பதை தடுக்கக்கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர். வழக்கு பல்வேறு கட்ட விசாரணைகள், நேரடி ஆய்வுகள், ஹை லெவல் கமிட்டி போன்றவை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு உடனடியாக மேற்படி குப்பைக் கிடங்கை அகற்ற கோரி ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர் ராம்சங்கர் கூறும்போது, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவை செயல்படுத்தாத உத்தரகாண்ட் அரசின் தலைமைச் செயலாளர் ஒரு மாத காலத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்றி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என 2018ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு உத்தரகாண்ட் அரசின் தலைமைச் செயலாளர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018 நவம்பர் மாதம் பழைய உத்தரவுகளை உறுதி செய்து உடனடியாக அதை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை கங்கை நதிக்கரையில் கொட்டப்படும், மலை போல் குவிந்துள்ள குப்பை கிடங்கு அகற்றப்படாமல் உள்ளது. அதை எதிர்த்து தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 27 செப்டம்பர் 2023ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 6 வாரத்திற்குள் மேற்கண்ட குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். ஆறு வாரக் காலத்திற்குள் அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதனை விசாரித்து நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அதிகாரிகள் செயல்படாமல் உள்ளனர். அரசு அதிகாரிகளின் அலட்சியம், பொறுப்பு இல்லாமல் இருப்பது போன்றவை அரசுக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும். இதுபோன்ற உத்தரவுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று அரசும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் என்றார் ராம்சங்கர் அழுத்தமாக.