தமிழுக்கும் ஆன்மீகத்துக்கும் தொண்டாற்றியதுடன், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்ததையடுத்து, புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சார்பில் நினைவேந்தல் மற்றும் மலர் வணக்க நிகழ்ச்சி புதுச்சேரி காமராசர் சிலை அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் பொறிஞர் இரா. தேவதாசு தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அரசின் வேளாண்துறை அமைச்சர் தேனீ க. ஜெயக்குமார் கலந்துகொண்டு மலர் வணக்கம் செலுத்தினார்.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர. மோகன், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் புதுவை அப்துல்லா, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு. சாமிநாதன், இராவணன் பகுத்தறிவு இயக்கத் தலைவர் இர. அபிமன்னன், புதுச்சேரி தன்னுரிமை கழகத் தலைவர் தூ. சடகோபன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், புதுச்சேரி நகர தலித் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், பழங்குடியினர் விடுதலை இயக்கச் செயலாளர் மா. ஏகாம்பரம், மக்கள் நல்வாழ்வு இயக்கத் தலைவர் இராஜா, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் செயலாளர் வேல்சாமி, மக்கள் நற்பணி மன்றத் தலைவர் மாறன், கவியரசு கண்ணதாசன் கழகத் தலைவர் தி. கோவிந்தராசு, புதுச்சேரி தமிழர் மரபு மையத் தலைவர் பேராசிரியர் ஆனந்தன், புதுச்சேரி வரலாற்றுப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் இரா. சுகன்யா உள்ளிட்ட தமிழ் அமைப்பினர், சமூக இயக்கத்தினர் ஆகியோர் மலர் வணக்கம் செலுத்தினர்.