Skip to main content

உ.பி-யில் நீதிபதியின் அறையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

உ.பி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் இசான். இவர் அந்த மாநிலத்தில் மிகவும் புகழ் பெற்ற தொழில் அதிபர். இவரை முன்பகை காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஷானவாஸ், ஜாபர் என்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் கடந்த 5 மாதத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.



இன்று வழக்கின் விசாரணைக்காக மேஜிஸ்திரேட் நீதிபதி யோகேஷ் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் குற்றவாளிகள் இருவரையும் நீதிபதி அறையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டார். இதில் குற்றவாளிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நீதிபதி கடும் அதிர்ச்சி அடைந்தார். குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் மகன்தான் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த 10 போலீசார் இடமாற்றம் செய்யப்படுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்