வங்க கடலில் உருவான ஃபானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடக்கத் தொடங்கியது.
ஃபானி புயலால் ஒடிஷா மாநிலம் புரியில் 142 கிமீ முதல் 174 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக ஃபானி புயல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடப்பதால் 10,000 கிராமங்களிலும் 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 10 லட்சம் பேர் முன்னெச்சரிக்கைக்காக பாதுகாப்பான பகுதிகளுக்கும், புயல் நிவாரண முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Clip 2
— Asit Mohanty - ଅସିତ ମହାନ୍ତି (@Asit5) May 3, 2019
Latest from #Puri #CycloneFani pic.twitter.com/n6opGNUcVQ
Extremely devastating scenario...
— Jhantu Nath?? (@iamjhantu) May 3, 2019
#CycloneFani pic.twitter.com/7l26xGom1A