Skip to main content

பிரிந்த காதலர்களை சேர்த்து வைப்பதாக கூறி போலி இணையதளம்... பல லட்சங்களை இழந்த இளம் பெண்!

Published on 29/01/2020 | Edited on 30/01/2020

ஆன்லைனில் மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் கோரேகாவ் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதலனுடன் சண்டை
ஏற்படவே இருவரும் பிரிந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே அந்த பெண் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் ஆன்லைனில் பிரிந்த காதலர்களை சேர்ந்து வைக்கும் இணையதளத்தை பார்த்துள்ளார். அதில் தன்னுடைய தகவல்களையும், தன்னை காதலருடன் சேர்ந்து வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதனையடுத்து அடுத்த நாள் அந்த பெண்ணிடம் பேசிய இளைஞர் ஒருவர் நாங்கள் காதலர்களை சேர்ந்து வைக்கும் இணையதளத்தில் இருந்து பேசுவதாக கூறி அந்த இளம் பெண்ணிடம் பேசி பத்தாயிரம் பணத்தை பறித்துள்ளனர். இதையடுத்து சில நாட்களில் மீண்டும் பேசிய அந்த இளைஞர், பெரிய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி மீண்டு 45000 பணத்தை கேட்டுள்ளார். இளம்பெண்ணும் அவர்களுடைய வங்கி கணக்கில் அந்த பணத்தை போட்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வங்கி கணக்கை வைத்து அந்த இளைஞரை தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்