கேரளாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் பனிப்போர் காலத்தில் நடந்ததாக ஒரு திரில்லர் கதையை நாவலாக்கி சாதனை படைத்திருக்கிறார்.
ஷ்ரவ்ட் ஆஃப் தி டெவில் (பிசாசின் கவசம்) என்ற தலைப்பிலான அந்த நாவல் அமெரிக்காவின் ரகசிய திட்டத்தை அடிப்படையாக கொண்டது. எட்வர்ட் புரூக்ஸ், ஜான் டோ என்ற இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவுக்காக ரகசிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். 1978ல் உருவாக்கப்பட்டு, 1991ல் ஸ்டார்கேட் ப்ராஜெக்ட் என்று பெயரிடப்பட்ட அமெரிக்காவின் ரகசியத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டதாக, நாவலாசிரியரான அடித் டாம் அலெக்ஸ் கூறினார்.
கோட்டயத்தில் உள்ள கஞ்சிராப்பள்ளியைச் சேர்ந்த இவர், அலெக் டாம், சிஜி செபஸ்டியன் ஆகியோரின் மகன். இந்த நாவலின் கதாநாயகர்கள் இருவரும் குறும்பு மிக்கவர்களாகவும், சிஐஏவுக்காக கூர்மையான அறிவுடன் வேலை செய்கிறவர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்த நாவலை எழுதிமுடித்த கையோடு, தி வயல் ஆஃப் இன்ஃபினிட் ஹேட்ரெட் (அளவற்ற வெறுப்பின் குப்பி) என்ற நாவலை கேரள சூழலை மையமாக வைத்து ஒரு நாவலையும் இவர் எழுதி வருகிறார்