Skip to main content

பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Don't Hug Cow Day- Animal Welfare Board backs down

 

உலக அளவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிப்ரவரி 14-ஆம் தேதி பசு அணைப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது. சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பானது ட்ரோல் செய்யப்பட்டதோடு, பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எழுந்தன. ஏராளமான விமர்சனங்கள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், பசு அணைப்பு தின அறிவிப்புக்கு எழுந்த எதிர்ப்பையடுத்து அதனைக் கைவிடுவதாக விலங்குகள் நல வாரியம் தற்போது அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதல் ஜோடியை முதலைக்கு உணவாக்கிய பெற்றோர்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

 Parents who feed a loving couple to a crocodile; Shocked at the trial

 

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற இளம்பெண் மற்றும் அவரது காதலன் இருவரையும் பெண்ணின் பெற்றோரே கொலை செய்து அவர்களது உடலை ஆற்றில் இருக்கும் முதலைகளுக்கு உணவாகப் போட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மத்தியப் பிரதேச மாநிலம் மோரினா மாவட்டத்தில் உள்ளது ரதன்பாஸாய் எனும் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஷிவானி தோமர் என்பவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யம் தோமர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இளம்பெண்ணும் அந்த இளைஞரும் ஒருநாள் திடீரென காணாமல் போயினர். ‘தனது மகனையும், அவர் காதலித்து வந்த பெண்ணையும் காணவில்லை. இருவரையும் கண்டுபிடித்து தாருங்கள்’ என இளைஞரின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக இளம்பெண் ஷிவானி தோமரின் போற்றோர் மற்றும் உறவினர்களை போலீசார் விசாரித்து வந்தனர். போலீசார் ஷிவானியின் தந்தை உள்ளிட்டவர்களை விசாரித்த பொழுது அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி ஷிவானியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஷிவானி மற்றும் ராதேஷ்யம் தோமர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கல்லைக் கட்டி சம்பல் நதியில் ஆயிரக்கணக்கான முதலைகள் உள்ள இடத்தில் உணவாக வீசியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

காத்திருந்த இந்து அமைப்பினர்; போலீசாரால் தடுக்கப்பட்ட காதலர்கள்! 

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

lovers day against incident in theni district vaigai dam 

 

நேற்று (14.02.2023) உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் ஜோடியாக வந்திருந்தனர். காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் விதமாக, இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் குமார் தலைமையில், கையில் மாலைகள் மற்றும் மாங்கல்யத்துடன் அங்கு வந்த சிலர், காதல் ஜோடிகளைத் தேடினர். ஆனால் அங்கிருந்த காதல் ஜோடிகள் இவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 

பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீசார் இந்த சம்பவத்தைக் கண்டவுடன் காதல் ஜோடிகளை வைகை அணைக்கு விடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் காதலர் தினத்தைக் கொண்டாட வந்த காதலர்கள் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.