Skip to main content

டெல்லி மாணவர்கள் உயிரிழப்பு சம்பவம்; மேயர் வீடு முற்றுகை

Published on 28/07/2024 | Edited on 28/07/2024
Delhi IAS training students killed; Siege of Mayor's House

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள பழைய ராஜேந்தர் நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரைதளத்தில் மழைநீர் நிரம்பியதில் சிக்கி நேற்று (27.07.2024) போட்டித் தேர்வுக்குத் தயாராகும் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பயிற்சி மையத்தின் உரிமையாளர், மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Delhi IAS training students killed; Siege of Mayor's House

அதே சமயம் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டெல்லி கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது டெல்லியின் மேயர் ஷெல்லி ஓப்ராயின் இல்லத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைக்க முயன்ற வருகின்றனர். இதனால் டெல்லியில் பதற்றம் தொற்றியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்