Skip to main content

இந்தியாவில் 1000க்கும் கீழாக குறைந்த கரோனா உயிரிழப்பு - புதிதாக 46,148 பேருக்கு தொற்று!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
jlk


இந்தியாவைப் பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 979 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றிலிருந்து நேற்று (27.06.2021) ஒரே நாளில் 58,578 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை  2.93 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். 3.02 கோடி பேருக்கு இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 5.72 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். அதேபோன்று தினசரி கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்