Skip to main content

போட்டியிட்ட 66 தொகுதிகளில் 63 தொகுதிகளில் டெபாசிட் காலி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

70 தொகுதிகளைக் கொண்ட  டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 8- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மையங்களில் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.



இந்நிலையில் காங்கிரஸ் கட்சி டெல்லியில் 66 தொகுதிகளில் போட்டியிட்டது. அதனை கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கிடைய முடிவு வெளியாகியுள்ள 70 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி டெபாசிட் வாங்கியுள்ளது. 63 தொகுதிகளில் அக்கட்சி தன்னுடைய வைப்புத்தொகையை இழந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவி தேர்தலில் போட்டியிட்ட ஆல்கா லம்பா-வும் தன்னுடைய டெபாசிட் தொகையை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்