Skip to main content

மூன்றாவது நாளாக குறையும் பாதிப்பு... 4.5 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

ுபர

 

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.49 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட கரோனா பாதிப்பு தற்போது சீராக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,346 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,53,048 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று காரணமாக ஒரேநாளில் 263 பேர் இறந்துள்ள நிலையில், 29,639 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,31,50,886 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவனையில் தற்போது வரை 2.52 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், நேற்று (04.10.2021) ஒரே நாளில் 72,51,419 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.75 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.33 ஆகவும் குணமடைந்தவர்கள் விதிகம் 97.93 ஆகவும் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்