Published on 05/04/2019 | Edited on 05/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறது.
![dates announced for rahul gandhi and sonia gandhi nomination filing](http://image.nakkheeran.in/cdn/farfuture/YneiVyqnlRGYxTTeLb4SKeD-75uhlIMzYajz7zq7BN0/1554464710/sites/default/files/inline-images/rahul-sonia-std.jpg)
இந்நிலையில் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி வருகிற 10 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார். அவரது தாயார் சோனியாகாந்தி 11ந்தேதி ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வயநாடு தொகுதியில் நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.