நாடு முழுவதும் இதுவரை (26/01/2021) 20.29 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மாநிலங்கள் வாரியாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கைக் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் 2,31,601 பேருக்கு கரோனா தடுப்பூச போடப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவில் 1,56,129, ஒடிசாவில் 1,77,090, ராஜஸ்தானில் 1,61,332, மஹாராஷ்டிராவில் 1,36,901, தெலுங்கானாவில் 1,30,425, உத்தரப்பிரதேசத்தில் 1,23,761, மேற்கு வங்கத்தில் 1,22,851, ஹரியானாவில் 1,05,419 பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 73,953 பேருக்கு கரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக டாமன் & டையூவில் 320 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.