இந்தியாவில் இதுவரை 3 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (24.06.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 54,069 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 68,885 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.56 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.30 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,91,981 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக 42 ஆயிரமாக இருந்த ஒருநாள் கரோனா தொற்று, நேற்று முன்தினம் 50 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 54 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.