Published on 21/03/2020 | Edited on 21/03/2020
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
![Corona virus Precautions - Ministry of Human Resource order](http://image.nakkheeran.in/cdn/farfuture/4FlMks4VUqZ6y_mYwrCBSkzI3WHEBnHg2MACa717kIo/1584795366/sites/default/files/inline-images/11111_204.jpg)
இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை கல்லூரி. சிபிஎஸ்சி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.