Published on 10/04/2020 | Edited on 10/04/2020
இந்தியாவில் கரோனா சமூக பரவல் என்ற நிலையை எட்டவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா சமூக பரவல் என்ற நிலையை எட்டவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், இரண்டாம் நிலைக்கும், மூன்றாம் நிலைக்கும் இடையே நாம் இருக்கிறோம். மூன்றாவது நிலை என்பது தான் சமூக பரவல். ஆனால் தற்போது வரை மூன்றாவது கட்டத்தை நாம் எட்டவில்லை. இருந்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.