Published on 05/06/2022 | Edited on 05/06/2022
மாநிலங்களவைத் தேர்தலில் ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ் கட்சி.
இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கட்சியின் சார்பில் பார்வையாளர்கள் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநிலத்திற்கு பவன்குமார் பன்சல், டி.எஸ்.சிங், ஹரியானா மாநிலத்திற்கு ராஜீவ் சுக்லா, பூபேஷ் பாகல் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.