Published on 10/02/2021 | Edited on 10/02/2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில், சுஷில் சந்திரா, ராஜிவ் குமார், உமேஷ் சின்ஹா உள்ளிட்ட 8 தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொண்ட குழு, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (10.02.2021) சென்னை வருகிறது. இன்று காலை 08.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, காலை 11.00 மணிக்கு சென்னை வருகிறது.
அதைத் தொடர்ந்து, நண்பகல் 12.15 மணிக்கு சென்னையில் தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் தலைமை தேர்தல் ஆணையர், மாலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசிக்கிறார். பின்னர், பிப்ரவரி 11- ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார்.