இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
கேரள மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்து வருகிறது. இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 677 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சிலர் விதிகளைக் காற்றில் பறக்க விடுவதால் தொற்று மோசமாகப் பரவி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.