உலக புரட்சியாளர்கள் பட்டியலில் மிக முக்கியமானவரும், கியூபா புரட்சியில் முக்கியமானவருமான சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா இந்தியா வந்துள்ளார்.
![che guevara's daughter visits india](http://image.nakkheeran.in/cdn/farfuture/EhU4MMZcy4hToLmcMvOVp2W9-CA5qYare7fQmCXXsh0/1564478919/sites/default/files/inline-images/cheda.jpg)
கியூபா நாட்டிலிருந்து டெல்லி வந்தடைந்த அவர், நேற்று முன்தினம் கேரளா வந்தார். இந்நிலையில் அவர் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து அவர் நாளை மறுநாள் கண்ணூரில் மகளிர் குழு ஏற்பாடு செய்துள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் 2-ந்தேதி எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில், கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்தும் மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சே குவேரா இந்தியா வந்ததன் 60 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக அவர் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.