கரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே தீர்வாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க, தற்போது தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை தவிர, மேலும் சில நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் உரிமத்தை வழங்கவேண்டும் என பல்வேறு எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைச்சகம், 'மிஷன் கோவிட் சூரக்ஷா' என்ற திட்டத்தின் கீழ், தடுப்பூசி தயாரிப்புக்காக சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு மானியம் அளிக்கவுள்ள நிறுவனங்களில் ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியன் இம்யூனோலாஜிக்கல் லிமிடெட் என்ற நிறுவனம் அடங்குமென்றும், இந்தநிறுவனம் மாதந்தோறும் 10-15 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.