Published on 23/08/2023 | Edited on 23/08/2023

ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரத்தில் உள்ள குருங் ஆற்றின் மீது 104 அடி உயரத்தில் புதிதாக ரயில்வே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் பாலத்தின் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக ரயில்வே பாலம் இன்று காலை இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிப் பலியானவர்கள் குடும்பத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.