ரபேல் விவகாரத்தில் உண்மையான நிலவரத்தை அறிய CAG அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ரபேல் விமான கொள்முதல் தொடர்பான CAG அறிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனை தாக்கல் செய்தார்.
அதில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட மோடி தலைமையிலான அரசு 2.86% குறைவான விலையில் ரபேல் விமானத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவையில் அமளி ஏற்பட்டதால் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர்.