மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாக்டிக்ஸ் நிறுவனம், முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக உருவாக்கி இருக்கும் விமானம் வர்த்தக ரீதியான பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது.
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் முதன்முதலாக பயணிகள் விமான போக்குவரத்து சேவையை இன்று (12/04/2022) தொடங்கியது. இந்தியாவில் போயிங், ஏர்பஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விமானங்களைக் கொண்டு தான் பயணிகள் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த டோர்னியர்- 228 ரக விமான சேவை அசாமின் திப்ரூகரில் இருந்து அருணாச்சலப்பிரதேசத்தின் பாசிகாட்டுக்கு இயக்கப்பட்டது. இந்த விமானம் 17 சிறு இருக்கைகளைக் கொண்டது. இந்த விமானத்தை அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்கி வருகிறது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் விமானம் இயக்கப்பட்டது.
விமான சேவையை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் தொடங்கி வைத்து, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
டோர்னியர் ரக விமானத்தை பாதுகாப்பு படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.