அரசுத்துறைத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், முதல் நிறுவனமாக 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போகிறது. இதுதொடர்பாக அந்நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு விட்டிருந்த நிலையில், நேற்று அதற்கான முதல் கட்டப் பணியாக ஜப்பானை சேர்ந்த சாஃப்ட் பேங்க் (soft bank ) மற்றும் என்.டி.டி. கம்யூனிகேஷன் ஆகிய இரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை பி.எஸ்.என்.எல். கையெழுத்து இட்டுள்ளது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அனுப்பும் ஸ்ரீவஸ்தவா "அநேகமான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருக்கும்போது பி.எஸ்.என்.எல் 5ஜி நோக்கி நகர்கிறது. 3ஜி சேவை அறிமுகமாகி மற்ற நாடுகள் எல்லாம் ஏழு வருடங்களாக பயன்படுத்திய பிறகுதான் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தது, அதேபோல் 4ஜி சேவையும் நான்கு ஆண்டுகள் கழித்தே இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், 5ஜி சேவை வரும் 2020-குள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும்" என்று தெரிவித்தார்.