Published on 05/03/2019 | Edited on 05/03/2019

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியின் அதிகார்பூர இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. bjp.org என்ற பாஜக கட்சியின் இணையதளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனை செய்தது யார் என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதனை செய்ததாக ஏந்த ஹேக்கர் குழுவும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பாக பாஜக கட்சி சார்பிலும் இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.