Published on 15/02/2020 | Edited on 15/02/2020
தமிழகம், மத்தியபிரதேசம் , கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில், மூன்று மாநிலங்களுக்கான தலைவர் பதவிகள் இன்று நிரப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் மாநில பாஜக தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.